"ஆலம் விதையோ 
பூமியிலே
ஆழ்ந்து வேர்கள் 
பதிக்கிறது
காலம் கடந்தபின் விழுதெல்லாம்
கனிவாய்த் தாங்க 
வருகிறது!"
காலங் காலமாய் 
இப்படித்தான்
கதைகள் சொன்னார் நம்பிவந்தேன்
ஆலின் நுண்ணிய 
ஆன்மாவை
ஆழ்கன வொன்றில் 
கண்டுகொண்டேன்
"வேருக்கு விழுது 
துணையென்று
வெட்டிக் கதைகள் 
பேசுகிறீர்
யாரறிவீர்கள்" 
என்றென்னை
ஏளனம் செய்தது 
ஆலினுயிர்.
ஏழு 
ஸ்வரங்களின் கருவறையில்
எழுகிற ராகங்கள் வேறில்லை
சூழும் விழுதுகள் ராகங்கள்
ஸ்வரங்களில்லாமல் இசையில்லை
ஆ 
வேர்தான் மூலப் பரம்பொருளாம்
விழுதுகள் எல்லாம் 
அவதாரம்
வேரின் சக்தியை வாங்கித்தான்
விழுதுகள் 
எல்லாம் வெளியாகும்
மாறுவேடத்தில் வேர்பார்த்து
மனிதர்கள் விழுதெனச் சொல்லுகிறார்
கூறுகள் போட்டே பழகியவர்
கண்கள் சொல்வதை 
நம்புகிறார்.
பிள்ளைச் 
சிரிப்பில் தெரிவதெல்லாம்
பிரபஞ்சம் 
படைத்தவன் புன்னகைதான்
தள்ளிப் பார்க்கத் தேவையில்லை
வேரும் விழுதும் 
ஒன்றேதான்
கனிதரும் மரங்களில் மட்டுமில்லை
காலம் 
இதையெங்கும் செய்கிறது
மனிதர்கள் 
முகங்களில் தேடுங்கள்
முன்னோர் சாயல் 
தெரிகிறது.
விழுதுகள் ஆணவம் 
கொண்டிருந்தால்
வேருக்கு அதனால் 
வலியில்லை
அழுகிற முகில்களை நம்பியிங்கே
ஆனந்த வானம் 
வரவில்லை
ஆல 
