கண்ணதாசன் விருதுகள்-2011


கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் சார்பாக 2011 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களும், கவியரசர் கண்ணதாசனின் உதவியாளரும்-"என் அண்ணன் கண்ணதாசன்" நூலின் ஆசிரியருமான திரு.இராம.முத்தையா அவர்களும் விருதுகள் ஏற்கின்றனர்.

ரூ.50,000/ பணமுடிப்பும்,பட்டயமும் கொண்ட இந்த விருதுகளை, இலக்கிய ஆர்வலர் திரு.கிருஷ்ணக்குமார் தன் சொந்தப் பொறுப்பில் வழங்கி வருகிறார்.

இந்த விருதுகள் 26.06.2011 ஞாயிறன்று கோவை மணிமேல்நிலைப்பள்ளி நானி கலையரங்கில் நிகழவுள்ள முழு நாள் விழாவின்போது வழங்கப்படவுள்ளன.

2009 ஆம் ஆண்டுக்கான விருது,திரு.நாஞ்சில் நாடன்,பாடகி திருமதி.டி.ஆர்.எம் சாவித்திரி ஆகியோருக்கும்,2010 ஆம் ஆண்டுக்கான விருது திரு.கல்யாண்ஜி,பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன