மரபின் மைந்தன்

Sunday, January 22, 2012

சூட்சுமமாய் அவள்சொல்லும் சேதி


 சூட்சுமமாய் அவள்சொல்லும் சேதி

பிச்சிப்பூ மணம்வீசும் பேரழகி சந்நிதியில்
பொன்னந்தி மாலையிலே நுழைந்தேன்
உச்சித் திலகம்திகழ் பச்சை மரகதத்தாள்
ஒளிவெள்ளப் புன்னகையில் கரைந்தேன்
துச்சம்நம் துயரங்கள் தூளாகும் சலனங்கள்
துணையாகும் திருவடியில் விழுந்தேன்
பிச்சைதரும் பெண்ணரசி பெருங்கருணை விருந்தினிலே
பேரமுதம் நான்பருகி எழுந்தேன்

தூபத்தால் கலயரவர் தொழுதிருந்த கடவூரில்
தூண்டாத தீபமவள் சிரிப்பு
தாபத்தால் அமுதீசன் தழுவவரும் கைவிலக்கும்
தளிர்நகையாள் திருமேனி சிலிர்ப்பு
கோபத்தால் காலனையே கடிந்திட்ட இடதுபதம்
கோமளையாள் கொண்டவொரு கொதிப்பு
ஆபத்தே சேராமல் அரவணைக்கும் அபிராமி
ஆணைதான் நம்வாழ்வின் நடப்பு



சரவரிசை தீபங்கள் சந்நிதியில் ஒளிர்ந்தாலும்
சுந்தரியாள் பேரழகின் சோதி
சுரவரிசை மாறாத சுகமான கீதங்கள்
சூட்சுமமாய் அவள்சொல்லும் சேதி
கரவரிசை நான்கினிலும் காக்கிறவள் கருணைதான்
காலத்தை நகர்த்துகிற நீதி
வரும்வரிசை கைகூப்பி வேண்டுவதை தருகின்ற
வஞ்சியவள் ஆதிக்கும் ஆதி

தைமாத நள்ளிருளில் தண்ணிலவைத் தந்தவள்தான்
தமிழ்கேட்டுத் தமிழ்கேட்டுத் தவித்தாள்
மைமேகப் பூங்குழலில் மின்னலெனப் பூச்சரங்கள்
மதுபொங்கத் தலையாட்டி ரசித்தாள்
தேவாரம் மணக்கின்ற திருக்கோவில் தனில்நின்று
தேனான அந்தாதி ருசித்தாள்
பாவாரம் சூட்டியவள் பூந்தாளில் வைப்பவர்க்கு
புகழ்வாய்ந்த பெருவாழ்வு கொடுப்பாள்
Posted by Blog admin at 8:11 PM
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Newer Post Older Post Home

பதிவுகளை மின்னஞ்சலில் பெற....

தளத்தில் தேட

Loading...

நமது நம்பிக்கை

வித்தியாசமான வாசிப்பு அனுபவத்திற்கு மட்டுமல்ல… வெற்றி நோக்கி இலட்சியப் பயணத்தில் இணைந்து கொள்ள! நமது நம்பிக்கை இது வெற்றிகளின் தலைவாசல்.

விருந்தினர்கள்

பதிவுகள்

  • ▼  2012 (12)
    • ►  February (3)
      • நாளை வெல்லும் நம்காலம்
      • சமயபுரத்தழகி
      • என்ன கொடுமை இது.....
    • ▼  January (9)
      • உயிரினில் நிறைபவன்
      • சூட்சுமமாய் அவள்சொல்லும் சேதி
      • சிவாஜி கணேசனின் முத்தங்கள் - இசையின் இன்னொரு தொகுப...
      • வேளாங்கண்ணி தரிசனம்
      • புரிதலின் பிராவாகம்
      • முரணிலாக் கவிதை
      • நாதரூபம்
      • கடவுளின் சுவடுகள்
      • கண்ணகி குறித்தொரு கலகல சர்ச்சை
  • ►  2011 (62)
    • ►  December (3)
      • சாம்பல் வாசனை
      • பாவை பாடிய மூவர்
      • ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்
    • ►  October (9)
      • கமலத்தாள் கருணை
      • அன்னபூரணி-( நவராத்திரி - 8)
      • காலைவரை காத்திருக்க....(நவராத்திரி 7)
      • சந்ததம் தொடர்பவள் அபிராமி (நவராத்திரி - 6)
      • அடிக்கடி வருகிற காட்சி - (நவராத்திரி-5)
      • சந்நிதி வாரீரோ - நவராத்திரி கவிதை - 4
      • பதங்களைத் தேடு (நவராத்திரி 3)
      • முதல்துளி அபிராமி (நவராத்திரி-2)
      • அவளே அறிவாள் (நவராத்திரி 1)
    • ►  September (4)
      • சொல்லவா... சொல்லவா... வெண்ணிலாவே!
      • மனிதம் வாழ்க!
      • ஆதி சிவனின் அரசாங்கம்
      • செப்டம்பர் 3 சத்குரு பிறந்தநாள்
    • ►  August (6)
      • நன்மை பயக்கும் எனின்.....
      • எது குற்றம்? எது சட்டம்?
      • உளிகள் நிறைந்த உலகமிது - 15
      • கங்கா மருத்துவமனை - ஓர் அன்னையின் கனவு
      • கமலாம்பா
      • உளிகள் நிறைந்த உலகமிது - 14
    • ►  July (6)
      • உளிகள் நிறைந்த உலகமிது - 13
      • சங்கல்பம்
      • உளிகள் நிறைந்த உலகமிது - 12
      • தத்துவம் கூட சிறிசு
      • உளிகள் நிறைந்த உலகமிது - 11
      • உளிகள் நிறைந்த உலகமிது - 10
    • ►  June (9)
      • உளிகள் நிறைந்த உலகமிது - 9
      • உளிகள் நிறைந்த உலகமிது - 8
      • உளிகள் நிறைந்த உலகமிது-7
      • உளிகள் நிறைந்த உலகமிது - 6
      • உளிகள் நிறைந்த உலகமிது-5
      • உளிகள் நிறைந்த உலகமிது-4
      • உளிகள் நிறைந்த உலகமிது-3
      • உளிகள் நிறைந்த உலகமிது-2
      • உளிகள் நிறைந்த உலகமிது - 1
    • ►  May (3)
      • அடையாளம்
    • ►  April (6)
    • ►  March (4)
    • ►  February (10)
    • ►  January (2)
  • ►  2010 (109)
    • ►  December (6)
    • ►  November (3)
    • ►  October (7)
    • ►  September (13)
    • ►  August (7)
    • ►  July (11)
    • ►  June (13)
    • ►  May (12)
    • ►  April (6)
    • ►  March (4)
    • ►  February (20)
    • ►  January (7)

Contributors

  • marabin maindan
  • Blog admin

Pageviews

Sparkline

வருகை

Picture Window template. Powered by Blogger.