வாசனைத் திரவியமே

 
உன்சுவாசம் என்மூச்சில் இடம்மாறுமே
உன் நேசம் என்வாழ்வின் நிறமாகுமே
உன் பாஷை நான்கேட்கும் இசையாகுமே
உன்வாசம் என்மீது உறவாடுமே
 
வாசனைத் திரவியமே...வா
வாலிப அதிசயமே...வா
 
நான்போகும் வழியெங்கும் நிழலாகிறாய்
நான்காணும் கனவெங்கும்  நீயாகிறாய்
நான்மூடும் போர்வைக்குள் துணையா கிறாய்
நான்பாடும் கவிதைக்குள் பொருளா கிறாய்
 
மன்மத மதுரசமே....வா
மஞ்சத்தின் ரகசியமே...வா
 
மீட்டாத பொன்வீணை நான்மீட்டவா
சூட்டோடு சூடாக சுதிகூட்டவா
தீட்டாத வண்ணங்கள் நான்தீட்டவா
காட்டாத சொர்க்கங்கள் நான்காட்டவா
 
சித்திரை முழுநிலவே...வா
முத்தத்தின் முழுசுகமே...வா
 
கையோடு நானள்ளும் நேரங்களே
மெய்யோடு புயல்வீசும் வேகங்களே
கொய்யாத மலர்கொய்யும் மோகங்களே
பெய்யாத மழைபெய்யும் மேகங்களே
 
மதுபொங்கும் மலர்ச்சரமே....வா
புதையலில் புதுரகமே...வா