சத்குரு கருத்தோட்டத்தில் இந்தத் தமிழோட்டம்

                   

(சத்குரு தந்த கருத்தோட்டத்தின் அடிப்படையில் சூர்ய குண்டம் பிரதிஷ்டைக்காக எழுதிய பாடல் இது)

பல்லவி

தண்ணீரே தண்ணீரே

பூமியின் உயிரே நீதானே

மண்ணோடும் விண்ணோடும்

ஆள்கிற அழகே நீதானேதாகம்தீர தாகம்தீர உன்னைக் குடித்தேனே

தீர்த்தமென்று தேடிவந்து உன்னில் குளித்தேனே

மூழ்கி மூழ்கி எழுகிறேன்

மீண்டும் உன்னில் விழுகிறேன்

மடியில் என்னை ஏந்திக் கொள்ளுவாயே

அலைகளாக வந்து துள்ளுவாயேசரணம்-1

மீன்களின் தாயகம் நீயென்று நினைந்தேன்

எனக்கும் தாய்மடி நீயென்று தெளிந்தேன்

உன்னில் தானே உயிர்வரை நனைந்தேன்

மலராய் இலையாய் உன்மேல் மிதந்தேனே

சரணம்-2

நீயில்லாமல் உயிர்களும் இல்லை

நீயில்லாமல் பூமியும் இல்லை

நீதான் நீதான் வாழ்க்கையின் எல்லை

நீதரும் சுகம்போல் வேறெதும் இல்லை


சரணம்-3
உன்னில் நானும் கலக்கிறேன்

என்னில் நீயும் கலக்க வா

இன்பமாகக் கலந்து போகலாம்

இன்னும் இன்னும் கொண்டாடலாம்