எதிர்த்துகிட்டு நீந்துதடி ஏடு

சொல்லாத வார்த்தைரொம்ப சூடு -அதை


எல்லோரும் சுமப்பதில்லை பாரு

நில்லாத ஆற்றுத்தண்ணீர் போலே-இங்கே

நீளுதடி நீளுதடி வாழ்வு


ஆசையின்னும் கோபமுன்னும் ஆட்டம்-இது

அத்தனையும் வெத்துப்பனி மூட்டம்

பேசுறதை ஒருநிமிஷம் எண்ணு-எல்லாம்

மீசையோட ஒட்டிக்கிட்ட மண்ணுஆமையோடு போலத்தானே மனசு-இதில்

அடங்கியுள்ள ஆசரொம்பப் பெரிசு

தீமையின்னும் நல்லதுன்னும் இல்ல-ஒரு

திரைவிழுந்த பின்ன என்ன சொல்லஎண்ணம்போல வாழ்க்கையிங்கே ஏது-அட

எதிர்த்துகிட்டு நீந்துதடி ஏடு

வண்ணம்பூசி மறைக்கவழி தேடு-ஆமா

வெளிறிப்போன வாழ்க்கைரொம்பப் பாடுவெட்கம்விட்டு உண்மைசொன்ன போதும்-ஒரு

துக்கம்வந்து நெஞ்சுக்குள்ளே மோதும்

சொர்க்கங்கெட்டு நரகமாக மாறும் -இதில்

தர்க்கமிட்டு ஆவதென்ன? போதும் !!
தாண்டிப்போகும் நிமிசமெல்லாம் பாடம்-அத

தாங்கிக்கிட்டுப் போகுதடி ஓடம்

தூண்டில்போட்டு காத்திருக்கும் காலம்-அதைத்

துண்டுபோட்டுப் பிடிக்கவரும் வானம்