Sunday, November 22, 2015

வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -4

சிறுகதையின் வடிவம்தான் அதன் வெற்றியின் மிக முக்கியமான அம்சம். பல ஆண்டுகளுக்கு முன்னர் தன் கவிதையொன்றில் "முடிக்கத் தெரியாத சிறுகதையை குறுநாவல் என்று கூப்பிட்ட மாதிரி" என்று கிண்டல் செய்தகவிஞர் வைரமுத்து தன்சிறுகதைகளை மிக நேர்த்தியாகக் கொண்டு
செலுத்துகிறார் என்பது நான் வாசித்துணர்ந்த ஒன்று . இங்கு நான் செய்நேர்த்தியை சொல்லவில்லை.நிரம்பிய குடத்தை அலுங்காமல் எடுத்து இடுப்பில் வைப்பது போல,சிந்தாமல் சிதறாமல் இவரால் கதைசொல்ல முடிகிறது.

திருமணத்திற்கு முன் தன் ஆண்மை குறித்து ஐயம் கொண்ட இளைஞன் ஒருவன் நண்பன் ஒருவன் வழிகாட்டுதலின் பேரில் விலைமகள் வீடு செல்கிறான்." அன்றைக்கு அவள் பெயர் காஞ்சனா"என்பது அந்தக் கதையின் தலைப்பு.பத்திரப்படுத்தும் முன்னெச்சரிக்கைத்தனத்தால் தன்னை அவன் இழந்திருப்பதை கதையின் கடைசிப் பத்திக்குக் கொஞ்சம் முன்னர் அவள் புரிய வைக்கிறாள். உடலியலை சோதிக்கப் போனவனுக்கு உளவியல் தெளிவைத் தருகிறாள். மார்பில் விழுந்தழுதவன் கீழே சரிந்து விழுகிறான்.
கதை முடிகிறது...

''முதன்முதலில் தன் கால்களில் காமமில்லாமல் ஓர் ஆண்மகன் விழுந்துகிடந்த அனுபவத்தை அன்றுதான் அடைந்தாள் அன்றைய காஞ்சனா"

உள்ளே நுழைந்தபோது அவனுக்குக் காமமில்லை. ஐயம்தான் இருந்தது. இப்போது அவனுக்கு ஐயம்நீங்கியது.ஆனாலும் காமமில்லை.நன்றியுணர்வு தான் இருக்கிறது என்பதை கதாசிரியர் முன்னெடுத்து வைக்கவில்லை. வாசகன் உணர்கிறான்.

கதைகளின் தலைப்பு பல நேரங்களில் வாசிப்பனுபவத்துக்குத் தடையாகிப் போகும்.ஆனால் வைரமுத்து சிறுகதைகள் நூலில் பல கதைகளிலும் தலைப்பே அந்த அனுபவத்தை முழுமை செய்கிறது.ஆற்றோடு வந்த பிணத்தைப் பிடித்து நகைகளையும் புடவையையும் எடுத்து வைத்துக் கொள்கிறான்காடையன். சுயநலப் பிண்டமாய் வாழ்பவன்.பிணத்தைப் புதைத்தும் விடுகிறான். துப்பு துலக்கி வரும் பெண்ணின் மாமனார் வகையறாக்களை விரட்டுகிறான். பெண்ணின் தாயார் வருகிற போது அவனிடம் என்ன மாற்றம் என்பதுதான் கதை.

அந்த மாற்றம், அவனுடைய ஆளுமையைத் திருத்துகிற மாற்றமல்ல. ஒரு மனிதனின் தவறுக்கு மற்றொருவர் ஆற்றும் எதிர்வினையின் ஏதோ ஓர் அம்சம் மாற்றத்தை ஏற்படுத்தும். ஜெயகாந்தனின் தவறுகள் குற்றங்களல்ல,அப்படியொரு நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும்."ஜஸ்ட் எ ஸ்லிப்,நாட் எ ஃபால்" என்று தன்ஸ்டெனோ தரும் மென்மையான மன்னிப்பு அந்த மனிதரிடம் ஏற்படுத்தும் ஆளுமை மாற்றம் அந்தச் சிறுகதையில் அழகாக வெளிப்படும்.

ஆனால் காடையனிடம் நிகழ்ந்தது கணநேர மாற்றம். அந்தத் தாயின் ஆவேசம் அவனை நிலைகுலைய வைத்தது. ஆனால் அவனுடைய கீழ்மைக் குணங்கள் ஏதும் அவனை விட்டு விலகப் போவதில்லை என்று வாசகனுக்குள் பொறிதட்டும் போது கதையின் தலைப்பும் அதனை உறுதி செய்கிறது..
"கொஞ்ச நேரம் மனிதனாயிருந்தவன்".

ஈழப் போராளி ஓருவனின் வாழ்க்கைச் சித்திரமாய் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதை,"என்ட மக்களே! எங்கட தலைவரே!" வடிவ அமைதிக்கு மற்றுமொரு சான்று. 

வெவ்வேறு கதைக்களங்கள். பெரும்பாலும் மனித உறவுகள் பற்றியும் உணர்வுகள் பற்றியுமான பதிவுகள்.மற்ற உயிரினங்கள் மீதானகனிவு குறித்தும் பேசும் கதைகள்.இப்படி இந்தத் தொகுப்பின் பலங்கள் பல.

மீண்டும் சொல்கிறேன்.ஒரு படைப்பை வாசிக்கும்போது ஏற்படும் எண்ணங்கள், ஒப்பீடுகள், புரிதல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே
அதுகுறித்த என் குறிப்புகளையோ விமர்சனங்களையோ எழுதுகிறேன்.
வைரமுத்து சிறுகதைகளையும் அப்படித்தான் அணுகியிருக்கிறேன்.

   //  விரிவான ஓர் இலக்கியவிமர்சன அணுகுமுறைக்குக்கூட அவசியமற்ற அளவில் அவை வெளிப்படையாகவே சாதாரணமாக உள்ளன// என்பது ஜெயமோகனின் எண்ணம். அப்படியல்ல என்பது என் எண்ணம். இந்தக் கட்டுரைகளில் இதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

(தேவை ஏற்படின் மீண்டும் பேசுவோம்)


வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -3

விமர்சனக் கோட்பாடுகள் என்பவை நேரடியாகச் சொன்னால் வாசிப்பின் கூரிய எதிர்வினைகள். தொடர் வாசிப்பிற்குப் பழகியவர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தின் விளைவாய் அத்தகைய கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள்.நான் கோட்பாடுகளை இரண்டாம் பட்சமாகக் கருதக் காரணமே அந்த அளவுகோல்கள் பெரும்பாலும் ஒரே சுருதியில் இயங்கும் விதமாக ஓர் எல்லையை உருவாக்கும் என்பதுதான்.

இமயமலை இத்தனை அடிகள் உயரம் என்று அளந்து சொல்லும் கருவி மலையென்றாலே இத்தனை அடிகள் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறது.அந்த அளவுகோலின்படி விந்தியம் ஒரு மலையல்ல. ஆல்ப்ஸ் ஒரு மலையல்ல. இதுதான் பெரும்பாலும் விமர்சனங்களில் நடக்கிறது.

பாற்கடலைக் கடைந்ததன் விளைவாய் அமுதம் வரும்.நஞ்சும் வரும்.சிந்தாமணி வரும்.திருமகளும் வருவாள்.அதுபோல் ஒரு நூலை வாசிக்கும் போது எழும் எதிர்வினை எத்தனையோ வகைகளில் இருக்கலாம்.
 வாசிப்பின் போது வரும் எண்ணங்களை தொகுத்துச் சொல்வது என்பது வேறு. சில அளவுகோல்களை தூக்கிச் சுமந்து கொண்டு அவற்றுக்குள் ஒரு படைப்பு அகப்படுகிறதா, அடைபடுகிறதா என ஆராய்வது வேறு.

இப்போது நான் வாசிக்கும் ஒரு கதை அதன் முற்றுப்புள்ளியையும் தாண்டி என்னிடம் பேசும்போதும்,ஏற்கெனவே நான் வாசித்துள்ளவற்றின் ரசனைச் சுடரைத் தூண்டும் போதும் அதனை ஒரு நல்ல படைப்பாக உணர்கிறேன்.
ஜெயமோகனின் முதற்கனல் குறித்து நான் எழுதிய "வியாசமனம்" தொடரும், சக்திஜோதியின் கவிதைகளை முன்வைத்து நான் எழுதிய "பஞ்ச பூதங்களும் ஒரு பறவையும்" தொடரும் அப்படி உணர்ந்ததால் விளைந்தவையே. அதுபோலத்தான்   வைரமுத்து சிறுகதைகளில் பல கதைகளை உணர்கிறேன்.

கவிஞர் வைரமுத்து தன் மொழி நடைவழி பெரிதும் அறியப்பட்டவர். அதன் வழியே வரவேற்பும் விமர்சனமும் ஒருசேரப் பெற்றவர். இந்நடை சார்ந்து ஜெயமோகன் இப்படி சொல்கிறார்.

 //  இரண்டு கூற்றமைதி. சிறுகதையின் மொழி ஓசையிடக்கூடாது. இயல்பான கூறுமுறை கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் சிறுகதை தன்னளவில் நவீனத்துவ இலக்கிய அலையின் உருவாக்கம். மொழியடக்கம் என்பது அதன் இயல்பு. அது சுருக்கம் அல்ல. நேரடியான சுருக்கமென்பது கலைக்கு எதிரானது. தட்டையான குறைத்துக்கூறலும் அல்ல. அது செறிவான நேரடி மொழி//

வைரமுத்து சிறுகதைகளின் மொழியில் நீங்கள் இரண்டு தளங்களைக் காணலாம். ஒன்று கதாசிரியன் கூற்றாக வரும் இடங்களில் கனிந்திருக்கும் மொழி நிதானம். பாத்திரங்கள் உரையாடும் இடங்களில் அந்தப் பாத்திரத்தின் சூழலுக்கேற்ப குலுங்கியெழும் மொழிச் சரளமமிதில் இன்னோர் அம்சம், பாத்திரம் யாரோடும் பேசாமல் மௌனக் கூற்றாகப் பேசும் இடங்களிலும் பல கதைகளில் மொழி நிதானம் வெளிப்படுவதைக் காணலாம்.

சான்றாக ஒன்று. " எல்லா மழையும் நின்றே தீரும்" என்றொரு கதை.கல்வி நிலையமொன்றில் நூலகர் வேலைக்கு வருகிறஒருவன் தன்னைப் பற்றி தன்னிடமே மானசீகமாகப் பேசுகிறான்.

" இருபத்திரண்டு வயது வரை அன்னாசிப்பழம் சாப்பிட வேண்டும் என்னும் ஆசை கூடநிறைவேறவில்லை. அவ்வளவு வறுமை.அசைவ ஓட்டலுக்குப் போய் பரோட்டாவுக்குச் சட்னி கேட்டுத் தொட்டுக் கொண்ட காலம் அது.பேண்ட்டுக்கு பெல்ட் போடவேண்டுமென்பது நிறைவேறாத ஆடம்பரம்.இந்த வேலைக்கு வரும்வரை அது சாத்தியமாயிருக்கவில்லை."

இதே மனிதன் தான் (ஒருதலையாய்) விரும்பும் பெண்ணை நினைத்து மனதுக்குள் பேசிக்கொள்ளும் போது அலங்கார நடையை லேசாகக் கிண்டல் செய்வதைக் காண முடியும்.

" அவள் அப்படி ஒன்றும் சிற்பமுமில்லை.பார்க்க முடியாத அற்பமுமில்லை. பளீர்ச் சிரிப்பு;பன்னீர் வார்த்தைகள்;ஆள் விழுங்கும் கண்கள்;சுரிதார் போட்ட சூரியகாந்தி என்று என்னை ஒரு மோசமான கவிஞனாக்கியவள் அவள்தான்"
என்கிறான் நூலகர் பணியிலிருக்கும் ராஜேந்திரன்.

பலர்கூடும் சந்நிதியில்அவர்களின் பேச்சொலி சட்டென அடங்கும் விதமாய் ஒரு மாயத்தை, ஆராதனைத் தட்டின் கற்பூரத்தை ஏற்றும் கணம் தருவதைப் போல கதை நிகழும் காலத்தினுள் வாசகன் சரேலெனப் பிரவேசிக்கும் வாய்ப்பை மொழிநடையே ஏற்படுத்துகிறது.

ராஜராஜன் என்னும் கதையில் பெருவுடையார் சந்நிதியில் ராஜராஜன் நிற்பதை வர்ணிக்கும் இடம் இது.

"வங்கியங்களின் துளைவழியே நாதச்சாறு வழிந்தோட,ஆலயத் திருமணியின் நடு நா, உலகப் பொது மொழியில் இறைவன் திருநாமத்தைக்
காற்றிலே ஓங்கி உச்சரிக்க,தமிழ்பாடுவார் நால்வர் திருப்பதிய விண்ணப்பஞ் செய்ய,ஆரியம் பாடுவார் மூவர் எழுதாக் கிளவிகளை எடுத்தோதிக் கொண்டிருக்க,ராஜராஜனின் தேவியருள் இருவரான லோகமாதேவியும் வானவன் மாதேவியும் மன்னனின் இருபுறமும் நின்று திருவழிபாட்டில் திளைத்திருக்க,.."

என்று தொடரும் வர்ணனை நம்மைக் கொண்டு நிறுத்தும் இடத்திற்கு மொழி நடை வாகனமாய் வாய்த்திருக்கிறதே தவிர வழியடைத்து நிற்கவில்லை.



கதாசிரியன் கூற்றாக வருகிற இடங்களிலும் பாத்திரங்கள் நெஞ்சொடு கிளத்தும் இடங்களிலும் காசோலை போல் இருப்பை உணர்த்தும் மொழி, பாத்திரங்கள்  தமக்குள் உரையாடும் போது மட்டும் காசுகளாய் கலகலக்கின்றன. இந்த வேறுபாடு பற்றிய புரிதல் வைரமுத்து சிறுகதைகளின் மொழியமைதியைப் புரிந்து கொள்ள உதவும்.மாறாக இக்கதைகளில் "ஓசையிடும் மொழிநடை" இருக்கிறது என்றும் "கூற்றமைதி இல்லை" என்றும் ஜெயமோகன் சொல்வதை ஏற்க இயலாது.
(பேசுவோம்)


   

Saturday, November 21, 2015

வாசிக்கும் உங்களுக்கு வணக்கம்

 என் பதிவுகள் http://marabinmaindan.com என்னும் என் வலைத்தளத்தில் தினமும் இடம் பெறுகின்றன. தாங்கள் நேரடியாக வலைத்தளம் வந்து வாசிக்க வேண்டுகிறேன்

Thursday, November 19, 2015

வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -1



வைரமுத்து சிறுகதைகள் தொடர்பான பட்டிமன்றம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதையொட்டி ஜெயமோகனின் தளத்தில்
திரு.அனோஜன் பாலகிருஷ்ணன் என்பவர் கேள்வி கேட்டிருந்தார்,அதற்கு
ஜெயமோகன் தன் அபிப்பிராயங்களை எழுதியிருந்தார்,
http://www.jeyamohan.in/80619#.Vk2ycL-bGyc

திரு.அனோஜன் பாலகிருஷ்ணன் யாரென எனக்குத் தெரியாது. ஜெயமோகனிடமே கேட்டேன். இலங்கையைச் சேர்ந்த இலக்கியவாதி என்றார்.இதற்குமுன் சில நூல்களைப் பற்றி ஜெ.யின் கருத்தைக் கேட்டு கடிதமெழுதியுள்ளாராம்.

எனக்கு இந்த அனோஜன், கோவையைச் சேர்ந்த ஃபிர்தௌஸ் ராஜகுமாரன் எனும் எழுத்தாளரின் நண்பராகவோ வாசகராகவோ இருக்கக் கூடும் என்று தோன்றியது.ஏனெனில் பட்டிமன்றம் ஒளிபரப்பான அன்று  ஃபிர்தௌஸ் தன் முகநூலில் எழுதியிருந்த வரிகள்

// நடுவராக அவ்வை நடராஜன் .
பேச்சாளர்களாக மரபின் மைந்தன் முத்தையா,
பர்வீன் சுல்தானா போன்ற வைரமுத்துவின்
ரசிக பேரவையின் ஆஸ்தான தொண்டர்கள்..!
பார்வையாளர்களின் நடு மத்தியில்
பிரதானமான அமர்ந்திருந்து அதை மிக
ரசிக்கிறார் வைரமுத்து..
https://www.facebook.com/FirthouseRajakumaaran?fref=nf&pnref=story//

அனோஜனின்கடிதத்தில்..
// அவ்வை நடராஜன் நடுவர். மரபின் மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்தானா போன்ற வைரமுத்துவின் ரசிக பேரவையின் ஆஸ்தான தொண்டர்களின் புகழ்பேச்சுக்கள்.

பார்வையாளர்களின் பிரதானமான இடத்தில் அமர்ந்திருந்தவர் வைரமுத்து. தன் படைப்புகளின் மீதான சிலாகிப்புகளை கேட்டு புல்லரித்தது மகிழ்ந்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் வைரமுத்து.//

இப்படி "ஒத்த சிந்தனை'யுடன் எழுதப்பட்டிருந்தாலும், சொகுசு வாழ்வுக்குப் பழகிப் போன எனக்கும் வெற்றித் தமிழர் பேரவையில் உறுப்பினராகக் கூட இல்லாதபர்வீனுக்கும் "தொண்டர்" பட்டம் வழங்கிய இவர்களின் பெருந்தன்மையை வியந்து கொண்டே ஜெயமோகனின் கட்டுரைக்குள் நுழைந்தேன்.


 தொலைக்காட்சி பட்டிமன்றம் நடத்தியதில் என்ன பிழை என்ற தொனியில்தான் தொடங்குகிறார் ஜெயமோகன். தான் அந்தக் கதைகளை
"ஒரு வாசகனாக ஒரு விமர்சகனாக" வாசித்ததாகச் சொல்கிறார்.அவரிடம் அலைபேசியில் பேசிய போது "வைரமுத்துவின் தீவிர ரசிகர் ஒருவர் அந்த நூலை எனக்குப் பரிசளித்தார்" என்றார். பொதுவாக எந்த ஒரு நூலையும் ஜெயமோகன் படிக்காமல் கருத்துச் சொன்னதில்லை. எனவே அவர் இந்த நூலை படித்துவிட்டார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

(மேலும் படிக்க..)

http://marabinmaindan.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C/

ஆதிசங்கரரும் கவியரசரும்

அர்த்தமுள்ள இந்து மதம் எழுதப்போந்த அவரின் ஆன்மீகப் பயணம், தன் சிற்றூரின் தெய்வமாகக் குடியிருக்கும் மலையரசி அம்மையின் மலர்த்தாள்கள் பற்றித் தொடங்கியது.
“காட்டு வழிதனிலே-அண்ணே
கள்வர் பயமிருந்தால்
வீட்டுக் குலதெய்வம்-நம்
வீரம்மை காக்குமடா” என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிப்பது போல்,பொதுவாழ்வில் கள்வர்கள் நடுவே பயணம் போன கவிஞரை அந்தத் தெய்வம் காத்தது.

சித்தர் பாடல்களையும் திருமுறைகளையும் தோய்வுடன் கற்ற கவிஞருக்கு ஆதிசங்கரர் மேல் ஏற்பட்ட ஈடுபாட்டின் வேர் இன்னதென்று விளங்கவில்லை.ஆனால் ஆதி சங்கரர் அருளிச் செய்த சில நூல்களைத் தமிழில் எழுதும் அளவு அவரின் ஈடுபாடு வளர்ந்தது.

முழுவதும் படிக்க
 http://marabinmaindan.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

Tuesday, November 17, 2015

சஷ்டி நாயகன் சண்முகன்-6-காதல் முருகன்

"யானை தன் அணங்கு வாழ்க! மாறிலா வள்ளி வாழ்க!" என்று கந்த புராணத்தின் நிறைவில் முருகன் வாழ்த்தில் வரும். அசுரர்களிடமிருந்து தேவர் குலத்தை மீட்ட முருகனுக்கு இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை மணமுடித்துத் தந்தான். வேட்டுவர் குலத் தலைவன் நம்பிராஜன் மகளாக வளர்ந்த வள்ளியை வேலன் தேடிப்போய் மணமுடித்தான்.

இருவருமே திருமாலின் புதல்வியர் என்றும் வெவ்வேறு இடங்களில் என்றும் கந்த  புராணத்திலேயே செய்தி உண்டு. மாமன் மகள்கள் !!

அருளாளர்கள் முருகன் மேல் இயற்றிய பனுவல்களில் வள்ளிக்கு கூடுதல்முக்கியத்துவம் தரப்படுவதைக் காணலாம். மானின் வயிற்றில் மானிடப் பெண்ணாய் அவதரித்த வள்ளியம்மை வரலாறு ஒரு தத்துவத்தைஉணர்த்துகிறது. தன்னை மறந்திருக்கும் உயிர்களை முருகன் வலியத் தேடிப்போய் ஆட்கொள்வான் என்பதே அந்தத் தத்துவம்.

அதனால்தான், முதன்முதலில் வள்ளியை நாரதர் சொன்னவண்ணம் சென்று பார்த்த கந்தன் பழம்பொருள் மீண்டும் கிடைத்ததுபோல் மகிழ்ந்தான் என்கிறார்
கச்சியப்பர்.

"மண்டலம் புகழுந் தொல்சீர் வள்ளியஞ் சிலம்பின் மேல்போய்ப் 
பிண்டியந் தினையின் பைங்கூழ்ப் பெரும்புனத் திறைவி தன்னைக் 
கண்டனன் குமரன் அம்மா கருதிய எல்லை தன்னில் 
பண்டொரு புடையில் வைத்த பழம்பொருள் கிடைத்த வாபோல்." 

 
"வள்ளிக்கு வாய்த்தவனே!மயிலேறிய மாணிக்கமே" என்னும் அருணகிரியார்,
 வள்ளிமேல் இருக்கும் காதலால் முருகன் அவளுடைய திருவடிகளைத் தொழுவான் என்பதை பகிரங்கமாகப் பறை சாற்றுகிறார் .

"பணியா எனவள்ளி பதம் பணியும்
  தணியா அதி மோக தயாபரனே"
என்றும்

"பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா" 
 
என்றும் பாடுகிறார்.  அதற்காக அருணகிரியாரிடம்" நீங்கள் தெய்வானையம்மைக்கு ஏன் முக்கியத்துவம் தரவில்லை என்று கேட்க முடியாது. "முதல் பாடலிலேயே அம்மையைத் தானே பாடினேன்"  என்று
சொல்லித் தப்பித்து விடுவார்
"முத்தைத் திரு பத்தித் திருநகை
  அத்தி" எனச்சொல்லித்தான் அருணகிரியார் திருப்புகழையே தொடங்குகிறார்.

இனி, கந்தபுராணத்தின்படி முதியவர் வேடத்தில் வந்து முருகனாகக் காட்சி கொடுத்து வள்ளியையும் மையல் கொய்யச் செய்து மறுநாள் வருவதாய் பன்னிருகைப் பரமன் புறப்பட்டுப் போய்விடுகிறான்.பிரிவாற்றாத வள்ளியை  அனைவரும் உறங்கிய நேரம் பார்த்து ,தோழி முருகனிடம் கொண்டு சேர்க்க அழைத்துச் செல்கிறாள்.முருகனும் வள்ளியைப் பிரிந்திருக்க ஏலாது அங்கே வந்து தவிக்கிறான்.


தாய்துயில் அறிந்து தங்கள் தமர்துயில் அறிந்து துஞ்சா 
நாய்துயில் அறிந்து மற்றந் நகர்துயில் அறிந்து வெய்ய 
பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழு ததனிற் பாங்கி 
வாய்தலிற் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென் றுய்த்தாள்
 
முருகன்  உடன்போக்கு முறையில் அழைத்துச் செல்ல முற்படுகையில் நாரதர் தடுத்து நன்மணம் முடிக்கச் சொல்வதாகவும்,அதேநேரம் மகளைக் காணாமல் தவிக்கும் தாய் தந்தைக்குச் சொல்ல எல்லோரும் வந்து முருகனே தங்கள் மகளை மணக்க வந்தவன் என்றறிகிறார்கள்.

வந்தவன் முருகன் என்பதை அறியும் வரை பெற்றோரும் உற்றோரும் படும் தவிப்பை கச்சியப்பர் பதிவு செய்கிறார். அதனை சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் விரிவாக தன் காவடிச் சிந்தில் பாடுகிறார். 


பாதிராத்திரி வேளையில் வீட்டுப்
          பக்கத்தில் வந்து மேவிப் - பஞ்ச
          பாதகன் ஒரு பாவி - சிறு
          பாவையை மெள்ளக் கூவிக் - கையைப்
     பற்றிக் கூட்டிக்கொண் டேகி னான்; பதை
          பதைக்குதே என்றன் ஆவி


 தேடினும்கிடை யாத தாகிய
          திரவியக் கரு கூலம் - போலே
          செனித்தபெண் ணுக்குச் சீலம் - வேறே
          திரும்பின தென்ன காலம்? - கொங்கை
     திரண்டி டாமுன்னம் மருண்டி டற்கெவன்
          செய்தானோ இந்த்ர சாலம்?

காடுசேர்கையில் கரடி வேங்கைகள்
          காட்டுமே ஆர வாரம், - அதைக்
          காதில் கேட்கவி சாரம் - வைத்துக்
          கலங்குவாள்; அந்த நேரம் - என்றன்
     காதலி தன்னை ஆதரித் துயிர்
          காப்பது வேலன் பாரம்.


இதனை முருகன் மேல் காதல்கொண்ட பெண்ணின்  தாய் நிலையில் இருந்து பாடினாலும் இதனை வள்ளியின் நற்றாயோடும் செவிலித்தாயோடும் பொருத்திப் பார்க்க இந்தச் சிந்தின் சில பத்திகள் இடம் கொடுக்கின்றன.

குன்று தோறும் இருப்பவன் குமரன் என்பதற்கு ஒரு புதிய விளக்கத்தை திரிகூட ராசப்பக் கவிராயர் வழங்குகிறார்.குறவர்கள் வேறு குலத்தின் பெண் கொள்ளவோ கொடுக்கவோ மாட்டார்கள். விதிவிலக்காக முருகனுக்குக் கொடுத்தார்களாம்.சும்மா கொடுக்கவில்லை.முருகன் வள்ளியை யானையிடமிருந்து காத்த வீரத்தைப் பாராட்டியும் வேங்கை மரமாய் வள்ளிக்கு நிழல் கொடுத்த காதலை மெச்சியும்தான் கொடுத்தார்களாம். அதுமட்டுமா? 
தங்கள் ஆளுகையிலிருக்கும் அத்தனை மலைகளையும் மாப்பிள்ளைக்கு சீதனமாய் கொடுத்து விட்டார்களாம்.


"ஒருகுலத்திற் பெண்கள்கொடோம்
 ஒருகுலத்திற் கொள்ளோம்
உறவுபிடித்தாலும்விடோம்  குறவர்குலம்நாங்கள்
 வெருவவரும் தினைப்புனத்தில் பெருமிருகம் விலக்கி
 வேங்கையாய் நிழல்பரப்பும் பாங்குதனைக் குறித்தே 
 அருளிலஞ்சி  வேலர்தமக்கு ஒருமகளைக் கொடுத்தோம் 
ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்"

இப்படி காலந்தோறும் தமிழ்க்கவிஞர்களால் உறவோடும் உரிமையோடும் கொண்டாடப்படும் கந்தன் புகழ்போற்றும் கந்தபுராணத்தை வாசிப்பதால் .வாசிக்க முயல்வதால் அல்லது பிறர் வாசிக்கக் கேட்பதால்என்ன பயன்? கச்சியப்பரே சொல்கிறார் கேளுங்கள்.

                    
பொய்யற்ற கீரன் முதலாம்புல வோர்பு கழ்ந்த 
ஐயற் கெனது சிறுசொல்லும் ஒப்பாகும் இப்பார் 
செய்யுற் றவன்மால் உமைபூசைகொள் தேவ தேவன் 
வையத்த வர்செய் வழிபாடு மகிழும் அன்றே
 
 வற்றா அருள்சேர் குமரேசன்வண் காதை தன்னைச் 
சொற்றாரும் ஆராய்ந் திடுவாருந் துகளு றாமே 
கற்றாருங் கற்பான் முயல்வாருங் கசிந்து கேட்கல் 
உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே
 
 
(எப்போதும் உடனிருப்பான்)  


  


Monday, November 16, 2015

சஷ்டி நாயகன் சண்முகன்-5-வேல்முருகன்



திருவாசகத்தில் பெரும்பாலானவர்களுக்கு நன்கு தெரிந்த பகுதி,சிவபுராணம். அதில் ஒரு வரி,"வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே".இந்த வாக்கியம் முருகனுக்கும் முருகன் கை வேலுக்கும் மிகப்பொருத்தம்.வேதங்களுக்கு அப்பாற்பட்டவன் அவன் என்பதால் "சுப்ரமண்யோஹம்" என மும்முறை விளித்து வணங்கின. அவன்கை வேல்,ஆழ்ந்தது.அகன்றது.நுண்ணியது.

வேலின் வீர தீரபராக்கிரமங்கள் எவ்வளவோ. அவை அனைத்திலும் மேம்பட்டது ஒவ்வொரு பக்தருக்கும் உடன்வரும் துணையாய் வேல் திகழ்கிறது என்பதை அருளாளர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதுதான்.

 கடலை வற்ற வைத்தவேல், கிரௌஞ்ச மலையைப் பிளந்த வேல், மாமரத்தைப் பிளந்த வேல் என்பனவெல்லாம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஓவ்வொருபக்தனையும் காக்க அது ஓடோடி வருகிறது என்பதுதான்.

அருணகிரிநாதரின் வேல்வகுப்பு இதனை விரிவாகப் பேசுகிறது.

"துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
   குலத்தை முதலறக் களையும் எனக்கோர் துணையாகும்"

'சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கியெழும் அறத்தை நிலை காணும்"    

"தனித்து வழிநடக்கும் எனதிடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்து
அருகடுத்து இரவு பகல் துணை அது ஆகும்"

என்பன அருனகிரியாரின் அனுபவ வாக்குகள்.

"பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே" என்கிறார் அவர்.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை

என்கிறார் நக்கீரர்.


இவற்றின் பின்புலத்தில் வந்ததே "வேலும் மயிலும் துணை" எனும் மந்திர வாசகம்."வெற்றிவேல்! வீரவேல்!" எனும் வீர முழக்கம்."சுற்றி நில்லாதே பகையே போ துள்ளி வருகுது வேல்" என்றான் மகாகவி பாரதி.

இந்த அடிப்படையிலேயே கவச நூல்களின் மகிமையை நாம் அவதானிக்க வேண்டும்.ஶ்ரீமத் பாலதேவராய சுவாமிகளின் கந்தர் சஷ்டி கவசம்,ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம், இந்த உறுதிப்பாட்டில் முகிழ்த்த வாக்குகள். பாராயணத்திற்குரிய மந்திரச் சொற்கள்.

 ஓங்கிய சீற்றமே கொண்டு உவனிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடிபரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க

 என்கிறார் ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள்.


அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க

பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க

அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

என்னும்  ஶ்ரீமத் தேவராய சுவாமிகளின் வாக்கினை அறியாத முருக பக்தர்கள் இல்லை.


இறைவன் ஆணையேற்று காற்றினும் கடுகி வந்து கந்தனின் கைவேல் காக்கும் என்னும் உறுதி பக்தர்களுக்கு மாபெரும் நெஞ்சுரத்தை வழங்க வல்லன.

வேல், கருணையின் திருவுருவம். சூரனின் அகந்தையை அழித்து மயிலாகவும் சேவலாகவும் வந்த அவனை முருகப் பெருமானின் வாகனமாகவும் கொடியாகவும் ஆக்குவித்ததில் வேலுக்கும் பங்குண்டு.

எனவேதான் முருகப்பெருமானுக்கிருக்கும் நாமாவளிகள் போலவே வேலுக்கும் எத்தனையெத்தனை பெயர்கள். கந்தவேல், முருகவேல், ரத்னவேல்,வஜ்ரவேல்,பழனிவேல்...அடுக்கிக் கொண்டே போகலாம்!!

Sunday, November 15, 2015

சஷ்டி நாயகன் சண்முகன்.4. அறுபடை முருகன்



சமீபத்தில் எழுத்தாளர் திரு.ஜெயமோகனுடனான அலைபேசி உரையாடலில் முருக வழிபாடு பற்றிப் பேச்சு வந்தது.பாரதம் முழுவதும் இருக்கும் முருக வழிபாட்டை சுட்டிய அவர், முருனை மிழ்க்வுள் என்று சொல்து பற்றிவிவாங்ளை ரிரு சொற்ளில் சுட்டினார்.

தொல்காப்பி காத்திற்கு முன்பிருந்தே முருழிபாடு மித்தில் உண்டு. சினை நாட்டினர் "ஹர் ஹர் ஹாதேவ்வ்" என்னும் முன்ரே வன் தென்னாடுடைசினாக இருந்திருக்கிறான். சிவன் ,முருகன் இருருமே மிழ்ச்ங்த்தில் ங்காற்றியிருக்கிறார்கள்.

"கூடல் புரந்தொருகால் கூடல் புரெதிர் 
பாடல் அறிவித்டைவேள்"

முருகன் கொண்டாடப்டுகிறான். காளிதாரின் காலம் ரியாணிக்கப்டாசூலில், குமாசம்வம் பாடிய அருக்கும் முன்பே ங்க இலக்கித்தின்  முனூலாகிதிருமுருகாற்றுப்டையை நக்கீரர் எழுதியிருக்வேண்டும் என்று தோன்றுகிது.

மேலும் நாட்டுக் கந்தன் பிரம்மச்சாரி. தென்னாட்டிலோ வள்ளி   தெய்வானை மேவள்ளல்.(தென்னாட்டில் விநாகர் பிரம்மச்சாரி.நாட்டிலோ சித்தி புத்தி மேநாகர் )

திருமுருகாற்றுப்டை முருனின் அறுடை வீடுளை ரிசைப்டுத்துகிது, முதல் படைவீடு திருப்பரங்குன்றம், இரண்டாம் படைவீடு திருச்செந்தூர், மூன்றாம் படைவீடு பழநி(திருவாவின்குடி), நான்காம் படைவீடு சுவாமிமலை, ஐந்தாம் படைவீடு திருத்தணிகை, ஆறாம் படைவிடு பழமுதிர்ச்சோலை.

இந்தத் தலங்கள் கந்த புராணத்தின் சம்பவங்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் கதை வைப்பு முறையில் இந்தத் தலவரிசை அமையவில்லை. ஆனாலும் முருக வழிபாட்டில் இந்த வரிசையே பெரிதும் பின்பற்றப்படுகிறது.

கந்தர் அனுபூதியில்,
" உல்லாச,நிராகுல,யோக இத
   சல்லாப விநோதனும் நீயலையோ" என்கிறார் அருணகிரிநாதர்.

இதில் உல்லாசம்- திருப்பரங்குன்றம்(தெய்வானை திருமணம்)நிராகுலம்-திருச்செந்தூர் (சூர சம்ஹாரம்) யோகம்- பழநி (ஆண்டிக் கோலம்) இதம்(சுவாமிமலை) சல்லாபம் -திருத்தணி (வள்ளி திருமணம்) விநோதம் பழமுதிர்சோலை.(சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்னும் விநோத விளையாட்டு?)

நக்கீரரின் சிறைவாசம் நீக்க வேல்விடுத்ததையும் தமிழ்க்கடவுளின் தமிழ்நேயமாக காண்பதுண்டு.

"பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி
 வரைக்குகையை இடித்துவழிகாணும்" என்று வேல்வகுப்பில் அருணகிரிநாதர் பாடுகிறார்.

"முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்"   என்று கந்தரலங்காரத்திலும் அவரே பாடுகிறார்.

அறுபடை வீடுகளைப் பாடிய நக்கீரர்,அதே திருமுருகாற்றுப்படையில் முருகனின் ஆறு திருமுகங்களும் என்னென்ன செய்கின்றன என்று குறிப்பிடுகிறார்.

உலகின் இருள் போக்கும் கதிர்போன்ற ஒருமுகம்,பக்தர்களுக்கு வரமருளும் ஒருமுகம்,வேள்வி நெறி காக்கும் ஒருமுகம்,நிலவு போல் ஒளிரும் ஒரு முகம்,வீரம் விளைவிக்கும் ஒருமுகம்,வள்ளியம்மையுடன் பேசி நகைக்கும் ஒருமுகம் என்று வரிசைப்படுத்துகிறார். 

 மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்துவரம் கொடுத்தன்றே ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போலத்திசை விளக்கும்மே ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் . .100

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே

ஆங்கு அம்மூஇரு முகனும்

இங்கே உங்களுக்கு திருவண்ணாமலை திருப்புகழ் நினைவுக்கு வரும்.

ஏ றுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.



 முருகனின் திருமுகங்கள் தொழிற்படுதல் பற்றிப் பாடுகிற மரபு நக்கீரரில் தொடங்கி கவியரசர் கண்ணதாசன் வரை வளர்ந்து பொலிகிறது.


 மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!


என்று பாடுகிறார் கவியரசர்.

(இந்தத் தாக்கத்தில் என் முதல் நூலாகிய "வேலின் வெளிச்சத்தில்"என்னும் கவிதைத் தொகுப்பில் கோவை அருகே தென்சேரிமலை அடிவாரத்திலுள்ள
குகைபாலதண்டாயுதபாணியைப் பற்றிய பாடல்களில் ஆறு முகங்களைக் குறித்தொரு பாடல் எழுதினேன். அதற்கான சுட்டி இது.)
 http://marabinmaindanmuthiah.blogspot.in/2010/08/2.html

குமர குருபரரின் கந்தர் கலிவெண்பா கந்தனைத் துதித்து தமிழ்ப்புலமையும் கவிபாடும் ஆற்றலும் பெறலாம் என்று சொல்கிறது.

 "பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத்
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம்
 சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண்.
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம் 

ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப்பியத் தொகையும் - ஓசை
 எழுத்துமுத லாம் ஐந்த இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து
ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்"

குமரகுருபரரே வாய் பேச முடியாத குழந்தையாய் இருந்து முருகப் பெருமான் அவர் நாவில் வேல்கொண்டு ஆறெழுத்து எழுதியதால் கவிபாடும் ஆற்றல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கியத்தின் முதல்நூலே முருகனை நோக்கி உலகத்தவரை ஆற்றுப்படுத்தும் நூலாக,அறுபடை வீடுகளுக்குமான ஆற்றுப்படையாக அமைந்தது தமிழர்களின் முத்திரைத் தெய்வமாக முருகன் இருப்பதன் அடையாளம்.

பல ஆண்டுகளுக்கு முன் செட்டிநாட்டில் முருகனைப் பற்றி ஒரு கவியரங்கம். கவிஞர் ஆத்தங்குடி சோமு என்று நினைவு. அவர் சொன்னார்.

'தனக்கென்று வீடுகள் தனித்தனியே ஆறிருந்தும்
வீட்டுவரி கட்டாத வேலவன் முருகன் மேல்
பாட்டு வரி கட்டப் புறப்பட்டு வந்தவர்நாம்"

(வருவான்)