Thursday, November 19, 2015

வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -1



வைரமுத்து சிறுகதைகள் தொடர்பான பட்டிமன்றம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதையொட்டி ஜெயமோகனின் தளத்தில்
திரு.அனோஜன் பாலகிருஷ்ணன் என்பவர் கேள்வி கேட்டிருந்தார்,அதற்கு
ஜெயமோகன் தன் அபிப்பிராயங்களை எழுதியிருந்தார்,
http://www.jeyamohan.in/80619#.Vk2ycL-bGyc

திரு.அனோஜன் பாலகிருஷ்ணன் யாரென எனக்குத் தெரியாது. ஜெயமோகனிடமே கேட்டேன். இலங்கையைச் சேர்ந்த இலக்கியவாதி என்றார்.இதற்குமுன் சில நூல்களைப் பற்றி ஜெ.யின் கருத்தைக் கேட்டு கடிதமெழுதியுள்ளாராம்.

எனக்கு இந்த அனோஜன், கோவையைச் சேர்ந்த ஃபிர்தௌஸ் ராஜகுமாரன் எனும் எழுத்தாளரின் நண்பராகவோ வாசகராகவோ இருக்கக் கூடும் என்று தோன்றியது.ஏனெனில் பட்டிமன்றம் ஒளிபரப்பான அன்று  ஃபிர்தௌஸ் தன் முகநூலில் எழுதியிருந்த வரிகள்

// நடுவராக அவ்வை நடராஜன் .
பேச்சாளர்களாக மரபின் மைந்தன் முத்தையா,
பர்வீன் சுல்தானா போன்ற வைரமுத்துவின்
ரசிக பேரவையின் ஆஸ்தான தொண்டர்கள்..!
பார்வையாளர்களின் நடு மத்தியில்
பிரதானமான அமர்ந்திருந்து அதை மிக
ரசிக்கிறார் வைரமுத்து..
https://www.facebook.com/FirthouseRajakumaaran?fref=nf&pnref=story//

அனோஜனின்கடிதத்தில்..
// அவ்வை நடராஜன் நடுவர். மரபின் மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்தானா போன்ற வைரமுத்துவின் ரசிக பேரவையின் ஆஸ்தான தொண்டர்களின் புகழ்பேச்சுக்கள்.

பார்வையாளர்களின் பிரதானமான இடத்தில் அமர்ந்திருந்தவர் வைரமுத்து. தன் படைப்புகளின் மீதான சிலாகிப்புகளை கேட்டு புல்லரித்தது மகிழ்ந்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் வைரமுத்து.//

இப்படி "ஒத்த சிந்தனை'யுடன் எழுதப்பட்டிருந்தாலும், சொகுசு வாழ்வுக்குப் பழகிப் போன எனக்கும் வெற்றித் தமிழர் பேரவையில் உறுப்பினராகக் கூட இல்லாதபர்வீனுக்கும் "தொண்டர்" பட்டம் வழங்கிய இவர்களின் பெருந்தன்மையை வியந்து கொண்டே ஜெயமோகனின் கட்டுரைக்குள் நுழைந்தேன்.


 தொலைக்காட்சி பட்டிமன்றம் நடத்தியதில் என்ன பிழை என்ற தொனியில்தான் தொடங்குகிறார் ஜெயமோகன். தான் அந்தக் கதைகளை
"ஒரு வாசகனாக ஒரு விமர்சகனாக" வாசித்ததாகச் சொல்கிறார்.அவரிடம் அலைபேசியில் பேசிய போது "வைரமுத்துவின் தீவிர ரசிகர் ஒருவர் அந்த நூலை எனக்குப் பரிசளித்தார்" என்றார். பொதுவாக எந்த ஒரு நூலையும் ஜெயமோகன் படிக்காமல் கருத்துச் சொன்னதில்லை. எனவே அவர் இந்த நூலை படித்துவிட்டார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

(மேலும் படிக்க..)

http://marabinmaindan.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C/