"ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும் ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை நீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார்".என்கிறது
கந்தபுராணம்.அந்த சோதிப் பிழம்பு என்ன செய்கிறது?
ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய"
வடிவும் முடிவும் கடந்த பரம்பொருள் கருணை கூர்ந்து மேற்கொண்ட திருவடிவே திருமுருகன்.கருணையின்
வடிவமென்பதற்கு சான்றாக, திருவவதாரம்நிகழ்ந்து சிறிது காலத்திற்குள்ளாகவே
இன்னொரு சம்பவமும் நிகழ்கிறது. ஆறு திருமுகங்களும் ஒரு திரு மேனியுமாக
சரவணப்பொய்கையில் முருகக் குழந்தை தாமரை மலரில்
வீற்றிருக்கின்றது.அக்குழந்தையைப் பேணி வளர்க்குமாறு கார்த்திகைப் பெண்களை
சிவபெருமான் பணிக்கிறார்.அறுவரும் சென்று கைநீட்டி அழைக்கின்றனர். என்ன
கேட்டாலும் தருகிற கருணை மூர்த்தியாகிய கந்தன் தன்னைக் கேட்டதும்
தனித்தனியே ஆறு குழந்தைகளாய் வடிவெடுக்கிறான்.
"மறுவறும் ஆர லாகும் மாதர்மூ விருவர்*தாமும் நிறைதரு சவர ணத்தின் நிமலனை அடைந்து போற்ற உறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுகோன் ஆத லாலே அறுமுக வொருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான்".என்கிறார் கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார்.ஒவ்வோர் உருவும் செய்யும் பிள்ளை விளையாட்டோ பேரழகு!துயிலவோ ருருவம் துஞ்சித் துண்ணென எழுந்து மென்சொற் பயிலவோ ருருவம் யாய்தன் பயோதரம் பவள வாய்வைத்து அயிலவோ ருருவம் நக்காங் கமரவோ ருருவம் ஆடல் இயலவோ ருருவம் வாளா இரங்கவோ ருருவஞ் செய்தான். ஓருருத் தவழ மெல்ல ஓருருத் தளர்ந்து செல்ல ஓருரு நிற்றல் செல்லா தொய்யென எழுந்து வீழ ஓருரு இருக்கப் பொய்கை ஓருரு வுழக்கிச் சூழ ஓருருத் தாய்கண் வைக ஒருவனே புரித லுற்றான். ஆறு மழலைத் திருவுருவங்களை முன்வைத்து, ஓர் அரியதத்துவத்தை கச்சியப்பர்உணர்த்துகிறார். நினைத்த மாத்திரத்தில்ஆயிரம் வடிவெடுக்கக் கூடியவன் இவன்.இவனேஉயிர்கள் தோறும் நிறைந்திருக்கும் குகன் " என்கிறார்.
இத்திறம் இருமூன் றான யாக்கையுங் கணம தொன்றில் பத்துநூ றாய பேதப் படும்வகை பரமாய் நின்ற உத்தம குமரன் றான்எவ் வுயிர்தொறும் ஆட லேபோல் வித்தக விளையாட் டின்ன மாயையால் விரைந்து செய்தான்.பரம கருணையாளன்...இந்த பாலமுருகன்(வருவான்)